Date:

நானுஓயா புகையிரத நிலையத்தில் பயணிகள் அவதி

செ.திவாகரன் டி.சந்ரு.

சித்திரை புத்தாண்டுக் காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மற்றும் நுவரெலியா நானுஓயா பகுதிகளுக்கு சுற்றுலா சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி செல்வதற்கு இன்று (16) முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பொது மக்கள் ,உள்நாட்டு ,வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி நோக்கி செல்வதற்காக நானுஓயா ரயில் நிலையத்தில் ஏராளமானவர்கள் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

பண்டிகை விடுமுறை முடிந்து மீண்டும் தொழில் நிமிர்த்தம் கொழும்பு திரும்பும் பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்போல் பேருந்துகள் இயக்கப்படவில்லை இதனால் நானுஓயா புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு செல்வதற்கு அதிகமான பயணிகள் வருகைத்தருவதால் பயணிகள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மேலும் அதிக பயணிகள் நானுஓயாவிக்கு வருகை காரணமாக புகையிரத சேவையினை பயன்படுத்தும் பயணிகள் பாதுகாப்பற்ற வகையில் புகையிரத மிதிபலகையில் நின்றவாறு பயணம் செய்தமையை அவதானிக்க முடிந்தது.

நுவரெலியா மற்றும் நானுஓயா உள்ளிட்ட சுற்றுலா பிரதேசங்களில் இருந்து பதுளை எல்ல பகுதியை நோக்கி செல்லதற்காக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நானுஓயா புகையிரத நிலையத்தில் காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது .

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒரு கிலோ இஞ்சி 3,000 ரூபாய்

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த...

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு நோட்டீஸ்

முன்னாள் பேரிடர் மேலாண்மை அமைச்சர் ஏ. எச். எம். பௌசிக்கு எதிராக...

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவித்தல்!

தொழில் செய்யும் அனைவருக்கும் ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதி, ஊழியர்...

பாட்டளிக்கு சிஐடி அழைப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க...