தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தலவாக்கலை ஹோலி ரூட் தோட்ட பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டிலிருந்து சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணியில் உறவினர்கள் ஈடுபட்டார்கள்.
இந்நிலையில் இன்று(15) காலை தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹோலி ரூட் தோட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கிடந்ததை அவதானித்த அப் பிரதேச மக்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்ததுடன் , இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஹொலீ ரூட் 18 ம் தோட்ட பிரிவை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.





                                    




