Date:

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவருக்கு நேர்ந்த பெரும் துயரம் !

சுவிட்சர்லாந்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு   வந்த ஒருவர் குளியலறையில் விழுந்து நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார்.

பாலசிங்கம் உதயகுமார் என்ற 55 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் சுவிஸில் இருந்து நவாலி தெற்கு, மானிப்பாய் பகுதியில் உள்ள அவரின் தாயார் வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் குறித்த வீட்டின் குளியலறையில் குளிக்கச் சென்றவேளை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

அத்துடன், உடற்கூற்று பரிசோதனைக்காக அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...