Date:

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

மேல், சப்ரகமுவ,​ தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுத் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதேநேரேம் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின்  காரணமாக, இவ் வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலக் கோடுகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (06) நண்பகல் 12.12 அளவில் மாராவில், பொதுஹெர, குருகெட்டே, கல்முனை, கெர்தலாவெல மற்றும் வராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா ?

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி இருப்பதாக வெளியான தகவலை, வாகன...

மாணவர்களுக்கு சிங்கப்பூரில் சந்தர்ப்பம்

இலங்கை பட்டதாரி மாணவர்களுக்கு பட்டப்பின் படிப்பிற்க்கான புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் உள்ளிட்ட உயர்கல்விக்கான...

மத்திய வங்கி நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும்...

பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 30 பேர் காயம்

பெலியத்த, ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இன்று அதிகாலை இரண்டு பேருந்துகள் நேருக்கு...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373