Date:

லொறியில் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு !

பெற்றோருடன் ஆலயமொன்றில் குழந்தை சமய நிகழ்வுகளில் ஈடுபட்டிருந்த போது, குறித்த ​​குழந்தை பெற்றோரின் கவனத்தில் இருந்து தப்பி வீதிக்கு வந்தபோது லொறியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை (Amparai) பிபில பிரதான வீதியில் நாமல் ஓயா பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், விபத்தில் படுகாயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்றிரவு (06.04.2024) இடம்பெற்ற இந்த விபத்தில் அம்பாறை, நாமல் ஓயா பகுதியைச் சேர்ந்த 02 வயது 07 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...