Date:

அரசாங்க மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவருக்கும் அனுமதி: காசல் மருத்துவமனை பணிப்பாளர் தகவல் !

மகப்பேற்றுக்காக வரும் கர்ப்பிணிகளுடன் அவர்களது கணவன்மாரும் மகப்பேற்று அறைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு இராஜகிரியவில் அமைந்துள்ள மகப்பேற்று மருத்துவமனையின் பணிப்பாளர்   தெரிவித்துள்ளார்.

மகப்பேற்று அறைக்குள் கர்ப்பிணிப் பெண்களின் கணவன்மாரை அனுமதிக்கும் முதலாவது அரசாங்க மருத்துவமனையாக  காசல் மருத்துவமனை (Castle Hospital) அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நடைமுறையினால் கர்ப்பிணிப் பெண்கள் தமது குழந்தைகளை நல்ல மனநிலையுடன் பிரசவிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இப் புதிய திட்டத்தினூடாக பிரசவ வேதனையானது தனது கணவனுடன் பகிரப்படுவதோடு, தாய்-தந்தை-குழந்தை உறவு படி நிலை மேலும் உறுதியாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பிரசவ அறைக்குள் கணவன்மாரை அனுதிக்கும் நடைமுறை ஏற்கனவே உள்ள நிலையில்,  அரசாங்க மருத்துவமனைகளிலும் முதன் முறையாக அனுமதிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் அதிரடி மாற்றம்

இன்று(30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம்...

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்கும்...

மருதானை – புறகோட்டை இடையில் ரயில் தடம்புரள்வு

மருதானை - கொழும்பு புறகோட்டைக்கு இடையில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக...

கனமழைக்கு வாய்ப்பு

அயனமண்டலங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு வலயம் (வட அரைக் கோளத்திலிருந்தும் தென் அரைக்கோளத்திலிருந்தும்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373