Date:

மாவனெல்லையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி !

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் நேற்று (06) இரவு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் உயிரிழந்தார்.

மாவனெல்லை பதியதொர பிரதேசத்தில் தகராறு ஒன்று ஏற்பட்டுள்ளதாக மாவனல்லை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு வந்த நிலையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர் ஒருவர், பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மற்றுமொரு பொலிஸ் அதிகாரி வானத்தை நோக்கிச் சுட்டதாகவும், பின்னர் குறித்த நபர் அந்த பொலிஸ் அதிகாரியையும் தாக்க முற்பட்ட போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது தாக்குதலை நடத்த வந்த நபரின் தந்தை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மாவனெல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் எனவும் அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் தற்போது மாவனெல்லை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கையை மாவனெல்லை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யுனெஸ்கோவிலிருந்து விலகிய அமெரிக்கா!

யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கலாச்சார மற்றும்...

மகனின் கைது குறித்து சபையில் உணர்ச்சிவசமானார் ஜகத்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் விற்ற வாகனம் தொடர்பாக தனது...

Breaking பேஸ்லைன் வீதியில் பாரிய வாகன நெரிசல் மின்சார சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கு...

எரிபொருளுக்கு விதிக்கப்பட்ட 50 ரூபாய் வரி நீக்கம் மகிழ்ச்சியான செய்தி வெளியானது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பழைய கடன்கள் முழுமையாக செலுத்தப்பட்டதும், எரிபொருள் லிட்டருக்கு...