தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம நுழைவுப் பகுதியில் பணியாற்றிய நிலையில் 1,418,500 ரூபாவுடன் தலைமறைவான நபரை பாணந்துறை குற்ற விசாரணைப் பிரிவினர் இன்று கைது செய்துள்ளனர்.
சுமார் 6 நாட்களுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 384,000 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
தாம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்துவதற்காக அந்தப் பணத்தை பயன்படுத்தியதாகவும், சந்தேகநபர் மதுபாவனைக்கு அடிமையானவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.