Date:

உடன் பதிவு செய்யுங்கள் ! முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

மேல் மாகாணத்தில் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் அனைத்து முச்சக்கர வண்டிகளும் மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையில்  பதிவு செய்து அனுமதிப்பத்திரம் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் பிரசன்ன சஞ்சீவ நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 0112864542 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பதிவு செய்வதற்கு 3000 ரூபா கட்டணம் அறவிடப்படும் என்றும், முச்சக்கரவண்டி பதிவுக்கு 3000 ரூபாவும், வருடாந்த பயணிகள் போக்குவரத்து சேவை அனுமதிப்பத்திரத்திற்கு 1000 ரூபாவும், சாரதி பதிவுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் உள்ள பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் 8 பிராந்திய அலுவலகங்களில் முச்சக்கரவண்டி பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை www.wptaxi.lk என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...

ரோஹிதவின் மகள் மற்றும் மருமகனுக்கு பயணத் தடை

முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டுப் பயணத்...

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...