தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூரிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென இரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது.
தீ தொடர்ந்து பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இத்தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்