Date:

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தில் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

அதேநேரம் மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீற்றர் அளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம்.

மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில்...

“தேவையற்ற பஸ் பயணங்கள் வேண்டாம்”

தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், அத்தியாவசியமற்ற நேரங்களில் இடம்பெறும் சேவைகளைக்...

ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா...

டுபாய், குவைத், சவூதி மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஐக்​கிய அரபு அமீரகத்​தின் டுபாய், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரைன், கட்டாரை...