Date:

யாழில் வாள்வெட்டு – கையை இழந்த குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன்  பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு  வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

ஞாயிற்றுக்கிழமை இரவு வாள்களுடன்  சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டியதுடன் வாளால் வெட்டிய போது கீழே வீழ்ந்த கை துண்டையும் ஏடுத்துச் சென்றுள்ளதாகவும் போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பத்தர் ஆவார்.

வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...