Date:

குவைத்திலிருந்து தன் எஜமானரையும் அழைத்து வந்த மனைவி – கோபம் கொண்டு வீட்டுக்கு தீ வைத்த கணவன் !

பிபில பகுதியில் நபர் ஒருவர் தன் வீட்டை தீ வைத்து எரித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நபரின் மனைவி குவைத்தில் வீட்டு வேலை செய்து வந்த நிலையில், தான் வேலை செய்த வீட்டின் எஜமானரான 80 வயது முதியவரை அழைத்து வந்த நிலையில், அவர் வீட்டில் தங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் இன்று அதிகாலை வீட்டிற்கு தீ வைத்துள்ளார்.

மனைவி, குவைத் நாட்டவர் மற்றும் வீட்டில் இருந்த 76 வயது முதியவர் ஒருவர் உள்ளிட்டோர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில், அவர்கள் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிற்கு தீ வைத்ததாக கூறப்படும் நபர் மொனராகலை மாவட்ட உள்ளூராட்சி சபையின் சாரதி எனவும் அவர் தற்போது குறித்த பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிபில பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசவாசிகள் அடங்கிய குழு தீயை அணைத்த போதிலும், வீடு மற்றும் அதன் உள்ளடக்கங்கள் மோசமாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...

விமலுக்கு பிடியாணை!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைபடுத்துமாறு கொழும்பு...

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை விதிக்குமாறு கோரிக்கை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதி யூன் சுக் இயோலுக்கு மரண தண்டனை...