பாகிஸ்தானில் கனமழை, பனிப்புயலுக்கு 10 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை மற்றும் பனிப்புயல் பெய்து வருகிறது. இதில் 27 வீடுகள் சேதமடைந்தன. மேலும் இந்த இயற்கை சீற்றத்துக்கு எட்டு குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர். 12 பேர் காயமடைந்தததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வியாழனன்று(28) கைபர் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள ஸ்வாட் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மழை மற்றும் பனிப்புயல் ஆகியே இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.