Date:

சிரியாவில் குண்டுவெடிப்பு – 7 பேர் உயிரிழப்பு !

சிரியாவின் அஜாஜ் நகரில் மக்கள் அதிகம் கூடக்கூடிய சந்தை பகுதியில், காரொன்றில் வைக்கப்பட்ட வெடிகுண்டு நேற்று(31) திடீரென வெடித்தது.

இச்சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்ததுடன் காயமடைந்த 30 பேர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரமலானை முன்னிட்டு, விரதம் முடித்து விட்டு இரவில் பொருட் கொள்வனவுக்காக மக்கள் அதிகளவில் அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதனை பயன்படுத்தி இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் கூறுகின்றனர்.

எனினும், இந்த சம்பவத்துக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக, துருக்கி ஆதரவு பெற்ற குர்தீஷ் இன கிளர்ச்சியாளர் குழுவினர் அடிக்கடி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

போரால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிரியாவில், இந்த நகரில் கடைசியாக 2 ஆண்டுகளுக்கு முன் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதன்பின்னர், நிலைமை அமைதியாக காணப்பட்டது.இந்நிலையில், இந்த பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது. சிரியாவின் வடமேற்கு எல்லை பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில், கடந்த சில ஆண்டுகளாக மக்கள் நெருக்கடியான பகுதிகளில் அடிக்கடி குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துரலியே ரத்தன தேரரை பிணையில் செல்ல அனுமதித்து நுகேகொடை...

கோபா குழுவின் தலைவராக கபீர் ஹாசிம்ll

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடருக்கான அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா)...