Date:

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ! சீனாவுடன் விரைவில் ஒப்பந்தம்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சினோபெக் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று தமக்கு அறிவித்ததாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதிய எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஹம்பாந்தோட்டையில் நிறுவப்படவுள்ளதுடன், அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கலந்துரையாடல் கொழும்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றதுடன், ஜூன் மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பான ஒப்பந்தத்தில் விரைவில் கைச்சாத்திடுவதற்கு சினோபெக் நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நவம்பரில் அமைச்சரவை இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட...

Breaking கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவித்தல்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும்...

சொஹாராவின் மாநகர சபை உறுப்பினர் பதவி பறிப்பு

மொஹமட் பாத்திமா சொஹாரா புஹாரி, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பதவியில்...

இலங்கை அணி இமாலய வெற்றி

கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இடம்பெற்ற 2026 டி20...