Date:

மருதமுனை மதரஸாவில் கொடூரம் !

அம்பாறை – பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை மதரஸா ஒன்றில் மாணவர்களை தண்டனை என்ற பெயரில் சுடும் வெயிலில் நிறுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள சூடான காலநிலையில் நீண்ட நேரம் வெளியே செல்ல வேண்டாம் என சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு போன்றவை அறிவுறுத்தல் வழங்கிய நிலையில் மருதமுனை மதரஸா மெளலவி ஒருவர் சிறு வயதை உடைய மானவர்களுக்கு இவ்வாறான சித்திரவதை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

புனித ரமழான் மாதத்தில் நோன்பாளியாக இருக்கும் நிலையில் இம்மாணவர்களின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. இச்சம்பவம் எப்போது இடம்பெற்றது என உறுதிப்படுத்த முடியாவிடினும் அண்மையில் எடுக்கப்பட்ட சம்பவமாகவே சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வருடம் சாய்ந்தமருது பகுதியில் ஒரு மதரஸா ஒன்றில் ஒரு மாணவனின் மர்ம மரணம் ஒரு சம்பவம் பதிவாகியது.

எனவே மதரஸாக்களின் நிலையும் அங்கு கற்பிக்கும் உலமாக்களின் நிலையும் தொடர்ந்தும் இவ்வாறு இருக்குமாக இருந்தால் நமது நாட்டில் உள்ள மதரஸாக்களின் நிலைக்கு பொறுப்பு கூறுவது யார்? இது சம்பந்தமாக மதரஸாக்களுக்கு பொறுப்பான அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...