Date:

லங்கா வைத்தியசாலை : கைக்குண்டை அமைச்சர் வீட்டிலிருந்து கொண்டுவந்ததாக வாக்குமூலம்

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையில் உள்ள கழிவறையில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, கொழும்பு – 07 விஜேராம மாவத்தையில் உள்ள அமைச்சர் ஒருவரின் உத்தியோகபூர்வ இலலத்தில் இருந்து தாம் கொண்டுவந்ததாக, கைதுசெய்யப்பட்டவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், சந்தேகநபரின் வாக்குமூலம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என, சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும் கொழும்பு குற்றவியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாரஹேன்பிட்டி லங்கா வைத்தியசாலையின் முதலாம் மாடியில் உள்ள கழிவறையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில், திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சாரக் கட்டணம் 30% குறைக்கப்படும் – அரசாங்கம் உறுதி!

வாக்குறுதி அளித்தபடி மூன்று ஆண்டுகளுக்குள் மின்சாரக் கட்டணத்தை 30 சதவீதத்தால் குறைப்பதாக...

சின்ன இங்கிலாந்திற்கு சர்வதேச அங்கீகாரம்!

உலகின் முன்னணி டிஜிட்டல் சுற்றுலா இணையத்தளமான Agoda, இந்த ஆண்டுக்காக பெயரிட்டுள்ள...

மத்தல விமான நிலையம் வரலாற்றுச் சாதனை

2025 ஆம் ஆண்டில் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் சாதனை...

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்

இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன இன்று (5)...