Date:

கப்பல் மோதியதில் நொறுங்கி விழுந்த பாலம் !

 

 

 

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 2.6 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ள பால்டிமோர் பாலத்திற்கு அடியில். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சரக்கு கப்பல் ஒன்று துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்த போது சரக்கு கப்பல் பாலத்தில் மோதியது.

சரக்கு கப்பல் மோதியதில், பால்டிமோர் பாலம் நொறுங்கி விழுந்தது. இந்த விபத்தில் பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்த கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த விபத்தில் சிங்கப்பூர் கொடியேந்திய சரக்கு கப்பல் சிக்கியது. இந்த கப்பல் மெர்ஸ்க் (Maersk) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். இது டாலி என அழைக்கப்படுகிறது. விபத்தில் சிக்கிய சரக்கு கப்பலை இந்தியாவை சேர்ந்த 22 பேர் அடங்கிய குழு இயக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

சரக்கு கப்பல் விபத்தில் சிக்கும் முன், அதில் மின்தடை பிரச்சினை ஏற்பட்டதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் மேரிலேண்ட் மாகாண ஆளுநர் வெஸ் மூரே தெரிவித்தார். விபத்தில் சிக்கிய கப்பலில் இந்தியர்கள் இருப்பது உறுதியாகி இருக்கும் நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தேசபந்து குற்றவாளி என சபாநாயகர் அறிவிப்பு

ஐஜிபி தேசபந்து தென்னகோனை விசாரித்த குழு, குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளி என்று...

இன்று காற்றுடன் கூடிய மழை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்...

ஐரோப்பாவில் சாதித்துக் காட்டிய மன்னார் இளைஞர்

மன்னார் – விடத்தல்தீவைச் சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி...

Breaking சீதுவையில் துப்பாக்கிச் சூடு

சீதுவை, ராஜபக்ஷபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்து...