Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இளம் தம்பதி ! – அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 400,000 ரூபா பெறுமதியான 88 விலங்குகளுடன் தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவிசாவளை, புவக்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய இளம் தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நேற்று பிற்பகல் 04.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-405 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

தம்பதியரின் காற்று நுழையும் வகையிலான பெட்டிகளில் தவளை, மீன், குளவி, அணில், ஆமை, பல்லி, எலி, மற்றும் பிற வகை புழுக்கள் ஆகியவற்றை உயிரினங்களை அடைத்து இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

பேங்கொக்கில் உள்ள விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளோ அல்லது சுங்க அதிகாரிகளோ இந்த உயிருள்ள விலங்குகளை அவதானிக்காதது பிரச்சினையாக உள்ளதென கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தம்பதியினர் சுங்க அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகள் நிறைவடையும் வரை கண்டுபிடிக்கப்பட்ட விலங்குகளை கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் பிரிவிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இஸ்ரேல் – பாலஸ்தீன இரு நாடுகள் தீர்வுக்கு இலங்கை உள்ளிட்ட 142 நாடுகள் ஆதரவாக வாக்களிப்பு!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களுக்கு இடையேயான...

எல்ல – வெல்லவாய விபத்து : உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் கடந்த 4ஆம் திகதி இரவு...

“சம்பத் மனம்பேரி” குறித்து மற்றுமொரு அதிர்ச்சி தகவல்

கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட...

ரமித் ரம்புக்வெல்லவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

சட்டவிரோதமாக 270 மில்லியனுக்கும் அதிக பெறுமதிக் கொண்ட சொத்துக்களை ஈட்டிய விதம்...