Date:

பிரேசிலில் கடும் புயல் – 10 பேர் உயிரிழப்பு !

தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. குறிப்பாக ரியோ டி ஜெனிரோவின் மலைப்பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

புயல் காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.புயல் மழை தொடர்பான விபத்துகளில் இதுவரை 10 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள், நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.பிரேசிலில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பமான காலநிலையாக காணப்பட்டது. அதிகபட்சமாக 62 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இவ்வெப்ப அலையைத் தொடர்ந்து திடீரென புயல் தாக்கியுள்ளது. காலநிலை மாற்றத்தால் இவ்வானிலை மாற்றம் நிகழ்ந்திருக்கலாமென நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வியட்நாம் அரசாங்கம் கோரிக்கை

மத்திய கிழக்கு போர் காரணமாக உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டுள்ளதாலும்,...

BREAKING: லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு

  லிட்ரோ வீட்டு எரிவாயுவின் விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு...

தலைநகர் டெல் அவிவ் உட்பட இஸ்ரேலின் பல முக்கிய நகரங்கள் இருளில்

இஸ்ரேலின் மின்சாரத் தேவையில் சுமார் 20 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் 'ஒரோட்...

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...