Date:

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !

 

 

பப்புவா நியூ கினியாவின் வடக்கே தொலைதூர பகுதியில் இன்று(24) அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அம்புந்தி பகுதியில் இருந்து கிழக்கு-வடகிழக்கே 32 கிலோமீற்றர் தொலைவில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலநடுக்கம் 35 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.நிலநடுக்கத்திற்கான தாக்கம் அதிகம் ஏற்பட கூடிய பகுதியில் பப்புவா நியூ கினியா உள்ளது. தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பெருங்கடலோர பகுதிக்குட்பட்ட நிலநடுக்கம் அதிகம் ஏற்பட கூடிய இடத்தில் அது அமைந்துள்ளது

கடந்த ஆண்டு ஏப்ரலில் இதுபோன்று பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.0 ஆக பதிவாகி இருந்தது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30...