பாகிஸ்தானின் குவாதர் துறைமுக வளாகத்தைக் கைப்பற்றிய 8 தீவிரவாதிகளை அந்நாட்டுப் பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
குவாதர் துறைமுகத்தின் அதிகாரிகள் வளாகத்தில் ஆயுதங்களுடன் புகுந்த பலூசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தீவிவாதிகள் துறைமுகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இதையடுத்து பொலிஸாருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையே பல மணி நேரம் மோதல் நீடித்த நிலையில் பொலிஸாரின் துப்பாக்கிச்சசூட்டுக்கு இலக்காகி தீவிரவாதிகள் எட்டுப் பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.