இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேட் மிடில்டனின் தோழி ரோஸ் ஹென்பரிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பிரித்தானியாவில் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.
பிரித்தானிய இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சைசெய்துகொண்ட நிலையில் இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
அவரது உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படும் நிலையில் இளவரசி கேட் அவரின் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானது.
பிரித்தானிய அரச பாரம்பரிய அடிப்படையில் அந்த படம் வெளியிடப்படாததால் அதுவும் சர்ச்சையானது.
இதற்கு மன்னிப்பு கேட்ட கேட், படத்தை சித்திரித்து வெளியிட முயன்றபோது தவறு ஏற்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.
இந்த மர்மங்களுக்கு மத்தியில் இளவரசி கேட் மிடில்டனின் நெருங்கிய தோழி ரோஸ் ஹென்பரிக்கும், இளவரசர் வில்லியமுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்த வதந்தியொன்று பிரித்தானியாவில் வேகமாகப் பரவி வருகிறது. இதை எவரும் மறுக்கவும் இல்லை, உறுதிப்படுத்தவும் இல்லை.
இந்நிலையில் இளவரசர் வில்லியமுடன் காதல் வதந்தி தொடர்பாக ரோஸ், “அனைத்து தகவல்களும் முற்றிலும் பொய்” எனத் தெரிவித்தார்.
ஆனால், வதந்தி பிரித்தானியாவில் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது.