Date:

அனுரகுமாரவை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் !

 

 

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நேற்று (19 ) இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் ஜப்பானிய தூதரகத்தின் பிரதித் தலைவர் கட்சுகி கோட்டாரோ மற்றும் இரண்டாவது செயலாளர் இமாய் கௌரி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இலங்கையின் தற்போதைய பொருளாதார, அரசியல் நிலவரங்கள் குறித்து இரு தரப்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

 

மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாடு குறித்தும் ஜப்பானிய இராஜதந்திர பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. இலங்கையில் முதலீடு செய்வதற்கு ஜப்பான் தயாராக இருப்பதை ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பகல் நேரத்தில் சார்ஜ் செய்யுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில்...

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...

மின் துண்டிப்பு தொட‌ர்பான அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் இதுவரை மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படவில்லை...

சுகாதார அமைச்சின் சில பிரிவுகளுக்கு ’வீட்டிலிருந்து வேலை’

சர்வதேச ரீதியில் நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டில் எரிபொருள்...