Date:

தமிழ் எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் இன்று போராட்டம் !

 

 

 

 

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) பாராளுமன்றத்தில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 பேரை நெடுங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது தொல்லியல் சட்டம் பாய்ந்துள்ளது. அவர்கள் பிணையில் வெளிவரக்கூடாது என்பதற்காக இந்த சட்ட நகர்வு மேற்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.

கைதானவர்களின் வழக்கு விசாரணை இன்று (19) வவுனியா நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது.

இன்று அவர்கள் மீதான குற்றப்பத்திரத்தில் திருத்தம் செய்து, அவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோர தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு நேரம் ஒதுக்குமாறு சி.வி.விக்னேஸ்வரன் கேட்டிருந்தார்.

என்றாலும், தமிழ் எம்.பிக்களை சந்திக்க ரணில் உடனடியாக நேரம் ஒதுக்கவில்லை. புதன்கிழமை பகல் 11 மணிக்கே ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் ஒதுக்கியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் இந்த நகர்வு தமிழ் எம்.பிக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பின்னணியில் இன்று காலை பாராளுமன்றத்துக்குள் போராட்டத்தில் ஈடுபட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். இதில் தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் கலந்து கெள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

தீப்பற்றி எரியும் விமானம்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல்...

ஈரான் மீது மீண்டும் தாக்குதல் பலர் உயிரிழப்பு

ஈரானில் நீதித்துறை கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர்...

இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை முழுவதும் இணையவழிக் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை...

குழந்தையின் பொம்மைக்குள் போதைப்பொருள்

பொம்மை ஒன்றுக்குள் மறைத்து வைத்து சூட்சுமமான முறையில் போதைப்பொருளை கடத்திய பெண்...