Date:

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !

நாட்டில் கடந்த சில மாதங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றது.

அந்தவகையில், இந்த மாதத்தின் கடந்த 10 நாள்களில் மாத்திரம் 67 ஆயிரத்து 114 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக ரஷ்யாவில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த மாதத்தின் இதுவரையில் ரஷ்யாவில் இருந்து 9 ஆயிரத்து 783 பேரும், இந்தியாவில் இருந்து 9 ஆயிரத்து 735 பேரும் ஜேர்மனியில் இருந்து ஆறாயிரத்து 301 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

 

கடந்த மாதத்தில் மாத்திரம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 350 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும்  சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...