Date:

திருகோணமலையில் மருந்தகம் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் !

திருகோணமலை-திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றையதினம்(14) இரவு 7.00 மணியளவில்  இடம்பெற்றுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில்  உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மருந்து கொடுக்கும் பகுதி மாத்திரமே சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலை 8 மணி முதல்  மாலை 4 மணி வரை மாத்திரமே மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும் தாக்குதல் இடம்பெற்ற வேளை வைத்தியசாலையில் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை எனவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும்  கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாது

உலகச் சந்தையில் விலைகள் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது எனவும், எண்ணெய் மற்றும்...

அயல் நாடுகள் மீதான தாக்குதல்களை நிறுத்தவுள்ள ஈரான்

அயல் நாடுகளிலிருந்து தாக்குதல் ஆரம்பிக்கா விட்டால் அந்நாடுகள் இலக்கு வைக்கப்படாதென ஈரானிய...

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தீப் பரவல்

யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்திக்கு அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றையதினம் தீப்பரவல்...

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இன்று மற்றும்...