Date:

நாட்டை வந்தடையவுள்ள 120,000 தடுப்பூசிகள்

இரண்டாவது டோஸுக்குத் தேவையான 120,000 ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் எதிர்வரும் திங்கள்கிழமை (20) நாட்டை வந்தடையும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

மருந்துகளின் இறக்குமதி, சேமிப்பு மற்றும் விநியோகம் குறித்த மறுஆய்வு கலந்துரையாடல் நேற்று (15) அமைச்சின் கேட்போர் சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்ற கண்டி மாவட்ட மக்களுக்கு இந்த இரண்டாவது டோஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மூன்று நாட்களுக்குள் கண்டி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி விநியோகிக்கப்படுவதுடன், அடுத்த வார இறுதிக்குள் இந்த தடுப்பூசி செலுத்தல் நடவடிக்கை பூரணமடையும்.

கண்டி மாவட்டத்தில் 150,000 பேருக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட 30,000 நபர்கள் தடுப்பூசியின இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது கூறினார்.

அத்துடன் அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை இருக்காது என்றும், பொது மக்கள் மருந்துகளின் இருப்புக்களை சேமித்து வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

அடுத்த நான்கு வருட இறுதிக்குள் நாட்டுக்குத் தேவையான அனைத்து மருந்துகளையும் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பின் கீழ் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் !

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில் மீண்டும் இன்று(29) அதிகாலை 5.11...

முல்லைத்தீவில் குடிநீர் விநியோகத் திட்டம் ஆரம்பித்து வைப்பு !

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் தேசிய நீர் தினத்தை...

வீட்டில் தனிமையில் இருந்த பெண் படுகொலை – மாயமான தங்க ஆபரணங்கள் !

கடுவெல - கொத்தலாவல, பட்டியாவத்த வீதியிலுள்ள வீட்டில் இரத்தக் காயங்களுடன் பெண்ணொருவரின்...

தென்னாப்பிரிக்காவில் விபத்து-45பேர் உயிரிழப்பு !

தென்னாப்பிரிக்காவில் கிறிஸ்தவ ஆராதனையில் பங்கேற்க சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில்...