சிலாபம் கல்வி வலயப் பிரிவிலுள்ள கொட்டராமுல்லை அல்ஹிரா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்ச்சிகள் நேற்று (6) புதன்கிழமை மாலை 1 மணியளவில் ஆரம்பமாகியது.
இந் நிகழ்வானது வித்தியாலய அதிபர் எஸ். சப்ராஸ் மொஹமட்
தலைமையில் விளையாட்டுக்குழுவின் வழிகாட்டுதலில் நேற்று சிறப்பாக நடைபெற்றது.
மேலும் குறித்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளுக்கான
பரிசளிப்பு விழாவில் புத்தளம் மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் முன்னாள் அமைச் சர்தயாசிறி த திசேரா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொன்டதுடன் கௌரவ அதிதியாக சிலாபம் கல்வி வலையத்தின் கல்விப் பணிப்பாளர் ஆர்.எம்.ரீ.என். பிரஷாட் இரத் நாயக்க கலந்துக்கொன்டார்.
மேலும் பழைய மாணவர் சங்கம் மற்றும் கொட்டராமுல்லை
அபிவிருத்தி சங்கத்தோடு இணைந்து ஊர் சார்ந்த அமைப்புக்கள்,நலன்விரும்பிகள் இன்னும் ஊர் மக்களின் பாரிய ஒத்துழைப்போடு குறித்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.