Date:

வரிப்பணம் செலுத்தும் போது சேவைக்கட்டணம் செலுத்த தேவையில்லை – கொழும்பு மாநகர சபை

இணையவழி ஊடாக வரி கட்டணம் செலுத்தும்போது கொழும்பு மாநகரசபையினால் அறவிடப்பட்டுவந்த சேவை கட்டணம் நீக்கப்பட்டுள்ளது. அதனால் வரி கட்டணம் செலுத்தும்போது சேவை கட்டணம் செலுத்த தேவையில்லை என கொழும்பு மாநகர ஆணையாளர் சட்டத்தரணி ராேஷினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு மாநகரசபைக்குட்பட்ட பிரதேசத்தில் வாழும் மக்கள் தங்கள் வரி கட்டணத்தை மாநகரசபையின் www.colombo.mc.gov.lk என்ற இணையத்தளத்துக்கு சென்று செலுத்துவதற்கு மாநகரசபை  இடமளித்திருந்தது. அதன் பிரகாரம் அதிகமான மக்கள் இணைவழி ஊடாக தங்கள் வரி கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு மாநகரசபையினால் வழங்கப்படும்  பொது மக்கள் நிவாரண நிதி, கிரேண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை மற்றும் மாளிகாவத்தை தபால் நிலையங்கள் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாமல்போனவர்கள், எதிவரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறும் மாநகர ஆணையாளர் கோரி இருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டிக்டொக் நட்பு விபரீதம் – மயக்க மருந்து கொடுத்து…

மனநல நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து மாத்திரைகளை அதிகளவில் கொடுத்து, நபர்களைப் போதையேற்றி,...

பால்கனியில் ரணில் ; சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2025 ஒகஸ்ட் 22 அன்று கைது...

சிறுமியை காணவில்லை ; பொது மக்களிடம் பொலிஸார் உதவி

மீகஹகொடுவ அரச தடுப்பு காவல் மையத்திலிருந்து (சிறுவர் இல்லம்) காணாமல் போன...

கொழும்பில் விசேட போக்குவரத்துத் திட்டம்

கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மகா பெரஹெராவை முன்னிட்டு,...