Date:

உணவுகளின் விலைகள் குறைப்பு !

நாடலாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும், ஒரு கோப்பை பால் தேநீர் 10 ரூபாயினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும், குறைக்கப்படவுள்ளன.

அத்துடன், சோற்றுப்பொதி ஒன்று 25 ரூபாயினாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிசாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள நிலையில் உணவுப்பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு நேற்று முன்தினம் அந்த சங்கம் தீர்மானித்திருந்தது.

இதேவேளை, உணவுப்பொருட்களின் விலையினை இந்த வாரத்தில் மீண்டும் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ஹர்சன ருக்ஷன் தெரிவித்தார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாணயச் சுழற்சியில் ஓமான் அணி வெற்றி

2026 டி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஓமான்...

சமன் ஏக்கநாயக்க விளக்கமறியலில்

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18...

அமரகீர்த்தி எம்.பி படுகொலை: 12 பேருக்கு மரண தண்டனை

முன்னாள் பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது...

தேயிலைத் தோட்டத்தில் ஜனாதிபதி…

நுவரெலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நானுஓயா - ரதல்ல...