Date:

கொழும்பு கொட்டாஞ்சேனை சேதீட்ரல் கல்லூரிக்கு கொடுத்த வாக்குறுதியை உடன் நிறைவேற்றினார் கலாநிதி ஜனகன் !

கொழும்பு கொட்டாஞ்சேனை கெதிட்ரல் (ஆண்கள்) கல்லூரி அதிபர் அவர்கள் கடந்த வாரம் கலாநிதி ஜனகன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க கல்லூரியின் நிற பூச்சு வேலை திட்டத்திற்கான வேண்டுகோளை உடனே ஏற்றுக் கொண்டு, தனது சொந்த நிதியில் இருந்து ஐ டி எம் ன் சி (IDMNC) சர்வதேச கல்வி நிறுவனத்தின் தவிசாளரும், ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் அவர்கள் ஜனனம் அறக்கட்டளையின் “கல்விக்கு கரம் கொடுப்போம்” திட்டத்தின் ஊடாக மூன்று லட்சம் ரூபாய் பெருமதியான காசோலையை இன்று(04/03) கல்லூரிக்கு நேரில் சென்று கல்லூரி அதிபரிடம் வழங்கி வைத்தார்.

இன் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டதுடன் அங்கு உரையாற்றிய கலாநிதி ஜனகன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்…

இப் பணிகள் அரசியலுக்காகவோ, எனது தனிப்பட்ட தேவைகளுக்காகவோ நான் மேற்கொள்ளவில்லை கல்வியின் ஊடாகத்தான் ஒரு சமூகத்தை கட்டி எழுப்ப முடியும் என்பது எனது நம்பிக்கை அந்த அடிப்படையில் கல்விக்காக எனது சொந்த நிதியில் இருந்து பல்வேறு வேலை திட்டங்களை செய்து வருகின்றேன்.

அது எதிர்காலத்தில் சிறந்த ஒரு கல்விச் சமூகத்தை உருவாக்கும் என நம்புகிறேன் அவ்வளவுதான்
என்று தெரிவித்தார்.

அத்துடன் கல்லூரியின் முக்கிய தேவையான இத் தேவையை பூர்த்தி செய்த கலாநிதி ஜனகன் அவர்களுக்கு பழைய மாணவர்களும், பெற்றோர்களும் தங்களின் நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கந்தானை நக‌ரி‌ல் முழு நிர்வாணமாக சைக்கிள் ஓட்டிய நபர்

பிரதான வீதியின் நடுவில் முற்றிலும் நிர்வாணமாக சைக்கிளில் செல்லும் ஒரு நபர்...

15 முறை பறக்கும் பலே கில்லாடி 35 கடவுச்சீட்டுகளுடன் சிக்கினார்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு...

சிஐடியில் முன்னிலையானார் அர்ச்சுனா

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை...

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின்

காசா பள்ளிவாசல் ஒன்றின் முஅத்தின் இவர். பெயர் சலீம் முஹ்சீன். பசி,...