Date:

எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பநிலை ! – இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும், அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்திருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, வறட்சியான காலநிலையைக் கருத்தில் கொண்டு விவசாய நடவடிக்கைளுக்காக நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நீர்ப்பாசன, வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி விவசாயிகளை கோரியுள்ளார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணனி அன்பளிப்பு!

ஹாஷிம் உமர் பௌண்டேசனினால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவசமாக மடி கணனி வழங்கும்...

காவல்துறை பாதுகாப்புடன் டெல்லி செல்லும் தளபதி விஜய்!

இந்தியாவின், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மத்திய புலனாய்வு விசாரணைக்காக...

மூடப்பட்ட அறுகம்பை இஸ்ரேலர்களின் சபாத் இல்லம்!

பொத்துவில் அறுகம்பையில் இயங்கி வந்த இஸ்ரேலர்களின் வணக்க வழிபாடுகள் இடம்பெற்று வருவதாக...

பொங்கல் தினத்தில் ஜனாதிபதி வடமாகாணம் பயணம்

தைப்பொங்கல் தினமான, 15ஆம் திகதி, வடமாகாணத்துக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...