Date:

அமைச்சருடன் இருந்தாரா புஷ்பிகா? புஷ்பிகா தெரிவித்த கருத்து

கடந்த 12ஆம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலையில் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய சம்பவம் தற்போது சூடுபிடித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே இராஜினாமா செய்துள்ளார்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் சிறைச்சாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்ற போது இலங்கையின் திருமதி அழகு ராணியான புஷ்பிகா டி சில்வாவும் அங்கு இருந்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் தொடர்பில் புஷ்பிகா டி சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.

அதன்படி குறித்த தகவலை மறுத்து அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவொன்றையும் இட்டுள்ளார்.

அத்துடன், சம்பவ இடத்தில் தான் இருக்கவில்லை எனவும், அந்த நேரத்தில் மாத்தறையில் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளின் வான்பரப்பு மூடல்- ஶ்ரீ லங்கன் விமான சேவையிலும் தாமதம்

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் காரணமாக மத்திய கிழக்கு...

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தொடர் தாக்குதல்களைத்...

ஈரான் மீது இஸ்ரேல் திடீர் ஏவுகணைத் தாக்குதல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.   ஈரான் மீதான...

பல நாடுகளின் வான்பரப்புகள் மூடல்

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான இராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து பிராந்திய பதற்றங்கள்...