Date:

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் ! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு !

எரிபொருள் விலை சூத்திரத்திற்கு எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர்,

விலைச்சூத்திரத்தில் அரசாங்கத்திற்கு கிடைக்கும் 4% ஈவுத்தொகையை குறைத்து அந்த நிவாரணத்தை மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்தார்.

பூஜ்ஜியத்திலிருந்து 4% வரை ஈவுத்தொகையைக் குறைப்பதன் மூலம் செலவுகளை மட்டுமே ஈடுசெய்யும் வகையில் விலை சூத்திரத்தை செயல்படுத்த நாங்கள் எண்ணியுள்ளோம்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், பிற LIOCகள் மற்றும் சினோபெக் ஆகியவற்றுடன் போட்டியிட அந்த 4% ஐப் பயன்படுத்த முயற்சிக்கிறோம்.

கடந்த ஆண்டு விலைச்சூத்திரத்தை அமுல்படுத்தியதால் பழைய கடனையும், வங்கிகளில் வாங்கிய கடனையும் ஈடுகட்ட முடிந்தது.

இதன் பயனை மக்களுக்கு வழங்குவதற்காக எதிர்காலத்தில் துரிதமாக செயற்படுவோம்  என நம்புகின்றோம். என தெரிவித்தார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின் நிலைத்தன்மை முயற்சிகளைப் பாராட்டிய MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி...

கொழும்பு மாநகரை தூய கரங்களில் ஒப்படையுங்கள் – பிரதமர் ஹரிணி அழைப்பு

மக்கள் செலுத்தும் வரிப் பணத்திற்கு பெறுமதி இருக்க வேண்டும் என்றும், அந்தப்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373