ஏற்றுமதி நிறுத்தப்பட்ட இந்திய வெங்காயத்தை மீண்டும் ஏற்றுமதி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பெரிய வெங்காயம் ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை முற்றாக நீக்குவதற்கு அந்நாட்டு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இருதரப்பு நோக்கங்களுக்காக வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு குறைந்த அளவு இருப்புக்களை ஏற்றுமதி செய்ய இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து மீண்டும் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால் விலையும் குறையும் என்று கூறப்படுகிறது.