Date:

ராஃபாவில் தரைவழிப் போருக்கு தெளிவாகத் திட்டமிடும் இஸ்ரேல் !

ராஃபாவில் தரைவழி போர் நடவடிக்கைகளை மேற்கொள்ள இஸ்ரேல்
தெளிவாக திட்டமிட்டு வருகிறது என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.

காசாவின் ராஃபா தாக்குதலை முன்னெடுக்கும் திட்டத்தை கைவிட
உலக தலைவர்கள் பலர் இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்துவரம் நிலையிலும் இதில் மாற்றம் இல்லை என்று இஸ்ரேல்
தெரிவித்துள்ளது.

ஜெருசலேமில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,

ராஃபா தாக்குதல் திட்டத்தை கைவிடுவது, ஹமாஸூக்கு எதிரான
போரில் தோற்பதற்கு சமமானது.

எவ்விதஅழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம். முழு வெற்றி கிட்டும்வரை இஸ்ரேல் சண்டையிடும்.

அமெரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் செயற்பட்டு வருகிறது. அமெ
ரிக்காவின் ஆதரவுக்கு நன்றியையும் தெரிவிக்கின்றோம்.

இஸ்ரேல் பிணைக் கைதிகள் 134 பேர் ராஃபாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கருதப்படும் நிலையில்
ஹமாஸ் அமைப்பின் தலைவர்களும் அங்கு தஞ்சமடைந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், ராஃபாவில் உள்ள பொது மக்கள் அங்கிருந்து
பாதுகாப்பாக வெளியேறிய பின்னரே, இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை தொடங்கும்.- என்று தெரிவித்துள்ளார்.

 

 

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...