இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I தொடருக்கான டிக்கெட்டுகளை கொள்வனவு செய்ய பொதுமக்கள் வருகை தந்துள்ளதால் தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும் டிக்கெட்டுகளை வாங்க முயற்சிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.