Date:

அட்டுலுகம சிறுமி பாத்திமா கொலை வழக்கு: குற்றவாளிக்கு 27 வருடங்கள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு !

அட்டுலுகம பகுதியைச் சேர்ந்த 09 வயது சிறுமியை கடத்திச் சென்று சேற்றில் மூழ்கடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிரதிவாதிக்கு இன்று 27 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை மேல் நீதிமன்ற நீதிபதி சமன் குமார இந்த தீர்ப்பை வழங்கினார்.

சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன்னர், பாணந்துறை – அட்டுலுகம பிரதேசத்தில் இந்தக் குற்றம் இடம்பெற்றது.

திட்டமிடப்படாத கொலை மற்றும் சிறுமியை அவரின் தாயின் வசம் இருந்து கடத்திச் சென்றமைக்காக அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட பாரூக் முகமட் கணேசநாதன், உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கு 30 லட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு வழங்காவிட்டால், மேலும், ஆறரை ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

27.05.2022 அன்று, வீட்டின் அருகே உள்ள கடையில் இருந்து வீடு திரும்பும் போது, சிறுமியை ஏமாற்றி, பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அருகிலுள்ள காட்டுக்கு குற்றவாளி அழைத்துச் சென்றுள்ளார்.

பின்னர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது அவர் அலறியுள்ளார்.

இதனால் பயந்து, சிறுமியை சதுப்பு நிலத்தில் புதைத்து கொன்நார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் தந்தையின் நண்பர் என்றும், சிறுமியின் வீட்டுக்கு அடிக்கடி வருபவர் என்றும், அதனால் சிறுமி எந்தவித அச்சமும் இன்றி குற்றம் சாட்டப்பட்டவருடன் சென்றுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கை கடவுச்சீட்டுக்கு கிடைத்த இடம்

இலங்கை கடவுச்சீட்டானது Henley கடவுச்சீட்டு குறியீட்டில் 5 இடங்கள் முன்னேறியுள்ளன. அதன்படி, இலங்கை...

‘Roar of Glory’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற SUN Awards 2025 நிகழ்வில் ஊழியர்களை கௌரவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. (CSE: SUN), அதன் வருடாந்திர SUN...

குடு மாலியின் மகள் – இப்படி ஒரு சீரழிவு…

மாரவில, மாரடை பகுதியில், செவ்வாய்க்கிழமை ( 22) ஆம் திகதி இரவு...