Date:

சூடான் மோதலில் 9 ஆயிரம் பேர் உயிரிழப்பு !

No description available.

 

சூடான் நாட்டில் இராணுவம் மற்றும் துணை இராணுவ படையினருக்கு இடையேயான மோதலால் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்துள்ளதுடன் இலட்சக்கணக்கானோர் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர்.

இதுபற்றி ஐ.நா.வின் மனிதாபிமான அலுவல்கள் அமைப்பு கூறும்போது, சூடான் மோதலால் 9 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். 60 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் சூடானுக்கு உள்ளேயும், வெளியேயும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். 2.5 கோடி பேர் உதவி தேவைப்படுவோராக உள்ளதாக தெரிவித்துள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து இதுவரை, தெற்கு சூடானுக்கு 5.4 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் புலம்பெயர்ந்துள்ளனர். டிசம்பர் மத்தியில் சூடானில் மோதல் அதிகரித்ததும், அகதிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இம்மோதல் குறித்து, சர்வதேச தொண்டு அமைப்பான சேவ் தி சில்டிரன் வெளியிட்ட செய்தியில், சூடான் அகதிகள் பலர் தங்குவதற்கான முகாம்கள் அமைந்த அபெய் சிறப்பு நிர்வாக பகுதியில் கடந்த 2 வாரங்களில் 3 குழந்தைகள் உட்பட 75 பேர் உயிரிழந்துள்ளனர். 2,200 பேர் புலம்பெயர்ந்து சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

NewsTamil Ad
NewsTamil Ad

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

இன்று பிறை தென்படாததால் சனிக்கிழமை நோன்புப் பெருநாள்

உப பிறைக் குழுக்களின் அறிக்கையின்படி 2026 மார்ச் மாதம் 19 ஆம்...

ஈரானின் ட்ரோன், ஏவுகணைகளை UAE இடைமறித்து அழிப்பு

ஈரானினால் இன்று (19) ஏவப்பட்ட 7 பெலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15...

27 நாட்களுக்குள் A/L பெறுபேறுகள்

க.பொ.த உயர் தரப் பரீட்சை (2025) பெறுபேறுகள் எதிர்வரும் தமிழ்-சிங்கள புத்தாண்டுக்கு...