பாகிஸ்தானில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அதிகளவிலான மக்கள் வாக்குகளை பதிவு செய்வதற்காக வாக்குச்சாவடிகளை நோக்கி செல்கின்றனர்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ராகன் கான் பதவி நீக்கம் செய்யப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தமுறை தேர்தலில் 128 மில்லியன் மக்கள் வாக்களிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் பிரதான கட்சிகளான முஸ்லிம் லீக் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு கடுமையான போட்டி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.