Date:

இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் உதவி வழங்க 118 பில்லியன் டொலர் ஒப்பந்தத்தை வெளியிட்டது அமெரிக்க செனட் !

எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்கும் மற்றும் இஸ்ரேலுக்கும் உக்ரைனுக்கும் போர்க்கால உதவியை வழங்கும் வகையிலும் அமெரிக்கா 118 பில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றினை எட்ட தீர்மானித்துள்ளது.

பல மாதங்களாக குடியேற்ற பிரச்சினை மற்றும் கியிவ் ஆதரவு தொடர்பான சர்ச்சைகளுக்குப் பின்னர் குறித்த சட்டமூலத்தை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி ஜோ பய்டன் காங்கிரஸை வலியுறுத்தியுள்ளார்.

உக்ரைனை போர்க்கால உதவியுடன் மீண்டும் வழங்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் செனட்டில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சித் தலைவர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதேநேரம் மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றங்களைச் சமாளிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பழமைவாத குடியரசுக் கட்சி தொடந்து வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்ட சட்டமூலத்தில் உக்ரைனுக்கு 60 பில்லியன் டொலர் உதவியும் இஸ்ரேலுக்கு 14.1 பில்லியன் டொலர் இராணுவ உதவியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

 

NewsTamil Ad
NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நாட்டின் எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையின் எரிசக்தி...

மத்திய கிழக்கு மோதல்கள்: 4 இலங்கையர்கள் காயம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக இதுவரையில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாகத்...

குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த...

மஹரகம நகரில் உள்ள கடைகளில் தீப்பரவல்

மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக...