ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீது தாக்
குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு இஸ்ரேலிய குடியே
றிகள் மீதான தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஒப்புதல்
அளித்துள்ளார்.
மேற்குக் கரையில் வன்முறை சகிக்க முடியாத அளவை எட்டி இருப்
பதாகக் குறிப்பிட்ட பைடன், ஒருபரந்த நிர்வாக உத்தரவில் கைச்சாத்
திட்டுள்ளார். தடை விதிக்கப்பட்டிருக்கும் தனி நபர்கள் அனைத்து அமெரிக்க ஆதனங்கள், சொத்துகள் மற்றும்
அமெரிக்க நிதி அமைப்பை அணுகு வது தடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இவ்வாறான தடை ஒன்று விதிக்
கப்படுவது இது முதல் முறையாகும்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி
காசாவில் போர் வெடித்தது தொடக்கம் மேற்குக் கரையில் வன்முறை
அதிகரித்துள்ளது.
இந்தக் காலப்பகுதி யில் அங்கு சுமார் 370 பலஸ்தீனர்கள்
கொல்லப்பட்டிருப்பதோடு இதில் குறைந்தது எட்டுப் பேர் இஸ்ரே
லிய குடியேறிகளின் தாக்குதல்களில் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.