Date:

யுக்திய சுற்றிவளைப்பில் மேலும் பலர் கைது!

 

கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.

கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

NewsTamil Ad

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை...

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட...

பங்களாதேஷில் மோதல்: 4 பேர் பலி; 50 பேருக்கு காயம்

பங்களாதேஷில் ஷேக் ஹசீனா ஆதரவாளர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில்...