Date:

கொழும்பில் புதிதாக திறக்கப்பட்ட இடைநிலை பராமரிப்பு மையம்- Rehab Home

கொழும்பு – தி ஒன் ரிஹாப் அண்ட் ஹெல்த்கேர், எங்களின் சமீபத்திய முயற்சியான ‘புனர்வாழ்வு இல்லம்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். எங்களின் பெரும் மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள் மற்றும் சமூகத்தினரினருக்கு இவ்வகை சேவை மிகவும் அவசியம் மற்றும் தேவை தொடர்பில் அறிந்ததால் இந்த அற்புதமான சேவையை நன்கு திட்டமிட்டு ஆரம்பித்துள்ளோம்.


அன்றாட இயல்பான செயல்பாட்டு சவால்களை அனுபவிக்கும் தனிநபர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ள இந்த சேவை இலங்கையில் முதல்தடவையாக Rehab Home என்ற பெயரில் தனித்துவமான மற்றும் விரிவான தீர்வை வழங்குகிறது.

எங்களின் இடைநிலை மறுவாழ்வு பராமரிப்பு என்பது, ஒரு பிரத்தியேக மறுவாழ்வுக் குழுவால் வழங்கப்படும் குறுகிய கால, வார்டு அடிப்படையிலான சேவையாகும். வைத்தியர்கள் , உளவியலாளர்கள், இயன்முறை வைத்தியர்கள், தொழில்சார் சிகிச்சையாளர்கள், பேச்சு சிகிச்சையாளர்கள், நடத்தை சிகிச்சையாளர்கள் மற்றும் கல்வி சிகிச்சையாளர்கள் போன்ற அனுபவம் வாய்ந்த நிபுணர்களைக் கொண்ட இந்தக் குழு, நோயாளர்களின் அதிகபட்ச தனித்தியங்கும் செயல்பாட்டுத் திறனை அடைய உதவுவதில் உறுதியாக உள்ளது.

651/31B, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 05 இல் அமைந்துள்ள Rehab Home குறுகிய கால இடைநிலை பராமரிப்பு மற்றும் நீண்ட கால முதியோர் பராமரிப்புக்கான அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனையில் இருந்து சமீபத்தில் வெளியேறிய நோயாளர்கள், அன்றாட செயல்பாட்டுச் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள், கோவிட் தொற்றுக்குப் பின் மறுவாழ்வு தேவைப்படும் நபர்கள் மற்றும் நீண்ட கால பராமரிப்பு தேவைப்படும் முதியவர்கள் உட்பட பலதரப்பட்ட நபர்களுக்கு இடமளிக்கும் வகையில் எங்கள் சேவை
கட்டமைக்கப்பட்டுள்ளது.

இந்த சேவை மூலம் யார் பயனடைவார்கள்?

– மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பிறகு மருத்துவ மேற்பார்வையில் மற்றும் அன்றாட செயற்பாட்டு இயக்கத்தில் சிரமம் உள்ள நபர்கள் (எலும்பியல் அறுவை சிகிச்சைக்குப் பின்)

– நாளாந்த செயற்பாடுகளில் சவால்களை எதிர்கொள்பவர்கள் (உதாரணம் – பக்கவாதம்)

– எலும்பு முறிவு அல்லது கோவிட் தொற்றுக்கு பின் நடமாடுவதில் மறுவாழ்வு தேவைப்படும் நபர்கள்

– சமநிலையை மேம்படுத்தவும், தடுமாறி விழுவதை மட்டுப்படுத்தவும் பயறசிகள் தேவைப்படும் நபர்கள்

– தீவிர அறுவைசிகிச்சைக்குப் பின்னர் தற்காலிக இயக்க சிரமங்களை அனுபவிக்கும் நபர்கள் (உதாரணம் -நரம்பியல் அறுவை சிகிச்சை)

– பைபாஸ் அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருதய நோய் பராமரிப்பும், பிற்சிகளும் தேவைப்படுபவர்கள்

– நீண்ட காலம் தங்கி எங்களின் தாதுயர் கவனிப்பு மற்றும் சேவைகளை விரும்பும் முதியவர்கள்


நோய் பாதிப்புடையவர்களுக்கு
மறுவாழ்வு இல்லத்தில் வழங்கப்படும் வசதிகள்:

– சக்கர நாற்காலி , முழுமையான வீட்டுச் சூழல்
– இணைக்கப்பட்ட கழிவறைகள் (A/C உடன் அல்லது இல்லாமல்) மற்றும் மின்விசிறியுடன் கூடிய 32 தனிப்பட்ட அறைகள்
– மருத்துவமனை படுக்கைகள் அல்லது விசேட படுக்கைகள் (காற்று மெத்தையுடன் அல்லது இல்லாமல்)
– 24/7 தாதியர் மேற்பார்வை
– படுக்கை அறையில் அலமாரி,
– பார்வையாளர் படுக்கை மற்றும் பார்வையாளர் நாற்காலி
– தினமும் மூன்று வேளை உணவு, காலை மற்றும் மாலை தேநீருடன் சிற்றுண்டி
– சூடான தண்ணீர் வசதி
– ஹோம் தியேட்டர் வசதியுடன் கூடிய உணவகம்
– கேபிள் இணைப்பு, இண்டர்காம் மற்றும் வைஃபை கொண்ட டிவி
– நீச்சல் குளம் மற்றும் மொட்டைமாடி இருக்கை வசதிகள்
– சுத்தமான பராமரிப்பு அறைகள்
– லிப்ட் மற்றும் வாகன நிறுத்துமிட வசதிகள்

Rehab Home “புனர்வாழ்வு இல்லத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் விரிவான மறுவாழ்வு சிகிச்சையை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வசதி. அதிகபட்ச தன்னிச்சையான செயற்பாட்டை மீண்டும் பெறுவதற்கான தனிநபர்களின் பயணத்திற்கு ஆதரவளிக்க எங்கள் குழு தயாராகவுள்ளது, என்று தி ஒன் ரீஹாப் மற்றும் ஹெல்த்கேர் நிறுவனத்தின் முதன்மை பிசியோதெரபிஸ்ட் மற்றும் இயக்குனரான துஷ்யந்தன் செல்வராஜா இந்த சேவை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தகவலுக்கு, சப்ராஸ் 0778527274 இல் தொடர்பு கொள்ளவும்.
ஒன் ரீஹாப் அண்ட் ஹெல்த்கேர், மிகச்சிறந்த சுகாதாரம் மற்றும் மறுவாழ்வு சேவைகளை அர்ப்பணிப்புடன் வழங்குவதற்கு தயாராகவுள்ளது. சாத்தியமான மிக உயர்ந்த தரத்தை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான சேவையை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

காஸா சிறுவர் நிதியம் – மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபா அன்பளிப்பு

காசா சிறுவர் நிதியத்திற்கு மாவனல்லை சாஹிரா கல்லூரி 33 இலட்சம் ரூபாவை...

சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

      வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்...

இலங்கையின் வீசா கட்டணங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டள்ள குற்றச்சாட்டு

ஆசிய பிராந்திய வலயத்தில் வீசா கட்டணம் மிகவும் அதிகமான நாடாக இலங்கை...

கொத்து உள்ளிட்ட உணவு வகைகளின் விலை குறைப்பு?

எரிவாயு விலை குறைக்கப்பட்டதன் காரணமாக பல உணவு வகைகளின் விலைகளை குறைக்க...