ஜனவரி மாதத்தின் முதல் 25 நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 136 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காலப்பகுதிக்குள் 1,189 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவற்றில் 130 பாரிய விபத்துகள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, கடந்த ஆண்டில் 22,804 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2,280 பேர் உயிரிழந்துள்ளனர்.