Date:

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு !

நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

அத்தோடு அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் பலதடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

 

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் மி.மீ. 75 அளவில் கனமழை பெய்யக்கூடும்.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...