Date:

நுவரெலியா கிரகரி வாவியிலிருந்து சடலமொன்று மீட்பு !

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியின் இன்று  (27) காலை சடலமொன்று மிதப்பதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

குறித்த சடலம் இராமன் பத்மநாதன் வயது (64) என்பவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் ஸ்தலத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதன் பின்னர், சடலம் வாவியில் இருந்து மீட்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வாவியில் பாய்ந்து உயிரிழந்தாரா? அல்லது எவராவது கொலை செய்து வாவியில் எறிந்து சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இலங்கையின் வெற்றி இலக்கு 140 ஓட்டங்களாக நிர்ணயம்..

ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடர் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய...

கட்டாருடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது இலங்கை!

இலங்கை கட்டாருடனான தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண்...

பாடசாலைகளுக்கான தவணை விடுமுறை அறிவிப்பு

2026 ஆம் ஆண்டில் பின்பற்றப்பட வேண்டிய பாடசாலைகளுக்கான தவணை அட்டவணையை கல்வி,...

நேபாள இடைக்கால பிரதமருக்கு ஜனாதிபதி வாழ்த்து

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு ஜனாதிபதி...