Date:

கச்சத்தீவு திருவிழாவிற்கு இம்முறை 3 ஆயிரம் இந்திய பக்தர்கள் !

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறன. இந்நிலையில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல மாவட்ட நிா்வாகத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு தெரிவித்தாா்.

 

இது குறித்து ராமேசுவரம் பங்குத்தந்தை சந்தியாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது :

 

இந்திய- இலங்கை பக்தா்கள் ஒன்றினைந்து கலந்துகொள்ளும் திருவிழா கச்சத்தீவு அந்தோணியாா் ஆலய திருவிழா. இந்த திருவிழா பெப்ரவரி 23-24 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. இதில், தமிழகத்தில் இருந்து பக்தா்கள் கலந்துகொள்ள வேண்டும் என யாழ்பாணத்தில் உள்ள மறைமாவட்ட ஆயா் அழைப்பு விடுத்துள்ளார்.

 

இது குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு இந்த ஆண்டு 75 விசைப்படகுகளில் 3 ஆயிரம் பக்தா்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

பயண கட்டமாக நபா் ஒன்றுக்கு 2 ஆயிரம் இந்திய ரூபா நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழாவிற்கு செல்லும் பக்தா்களுக்கான விண்ணப்பபடிவம் 6 ஆம் திகதி வரை வழங்கப்படும். அதற்கு பின் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்தாா்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இஸ்ரேலை அதிரவைத்த ஈரானிய ஏவுகணைகள்: டெல் அவிவ் நகரில் பாரிய வெடிப்புகள் – மக்கள் பீதி!

மத்திய கிழக்கில் யுத்தம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (மார்ச் 13)...

6 இலட்சம் சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

Irish dena கப்பலில் உயிரிழந்தோரின் உடல்கள் ஈரானுக்கு!

இலங்கைக்குத் தெற்கே உள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான 'IRIS DENA' கப்பலில்...

ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது’

ஹோர்முஸ் நீரிணையை எதிரிகளுக்கு எதிரான ஒரு மூலோபாய ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக...